இத்தனை கோடி ஹவாலா பணம் சிக்கியது. லட்சம் லட்சமாக ஹவாலா பணம் சிக்கியது என செய்திகளை நாம் அனைவரும் கடந்து வந்திருப்போம். ஹவாலா என்றால் என்ன..? இது எப்படி சட்ட விரோதமாகும் என்று இந்த பதிவில் பார்ப்போம்.
ஹவாலா என்பது அரபி சொல். இதற்கு பரிவர்த்தனை அல்லது பரிமாற்றம் என்று பொருள். ஒரு நபர் தன்னுடைய பணத்தை வெளிநாட்டிற்கு அனுப்ப வேண்டும். அல்லது, வெளிநாட்டில் இருந்து பணத்தை பெற வேண்டும் என்றால் சட்டப்படி வங்கிகள் மூலமாக தான் அனுப்ப வேண்டும்.
அதுவே, பெரிய தொகையாக இருக்கும் போது ரிசர்வ் வங்கியின் அனுமதி மற்றும் நிதியமைச்சகத்தின் அனுமதி எதனால் பணத்தை அனுப்புகிறீர்கள் அல்லது எதற்காக பணத்தை பெறுகிறீர்கள் என்பதற்க்கான ஆதாரத்தை காட்ட வேண்டும். சட்டப்படி தொழில் செய்யும் யாரும் ஹவாலா நடைமுறைக்கு செல்ல மாட்டார்கள்.
ஆனால், சட்ட விரோதமாக செயல்படும் நிறுவனங்கள், மதமாற்ற அமைப்புகள் இந்த முறையை பின்பற்றுகின்றன. இது எப்படி நடக்கிறது என்று பாப்போம். உதரணமாக, நீங்கள் இந்தியாவில் இருகிறீர்கள். 10 லட்ச ரூபாய் பணத்தை அரசுக்கு தெரியாமல் அமெரிக்காவுக்கு நீங்கள் அனுப்ப வேண்டும். இந்தியாவில் உள்ள ஹவாலா முகவரிடம் சென்று நீங்கள் பத்து லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து விட்டால் அவர் உங்களிடம் ஒரு ரகசிய எண்ணை கொடுப்பார்.
அதனை, நீங்கள் அமெரிக்காவில் நீங்கள் யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ அவரிடம் அந்த ரகசிய எண்ணை கொடுத்து விட வேண்டும் அல்லது நீங்களே கூட அமெரிக்காவிற்கு சென்று அந்த ரகசிய எண்னை கொடுத்து பணத்தை பெறலாம். அந்த ரகசிய என்னை அங்குள்ள ஹவாலா முகவரிடம் கொடுத்தால் அந்த நாட்டின் கரண்சியிலேயே பத்துலட்ச ரூபாய் பணத்தை கொடுத்து விடுவார்.
இதற்காக, அந்த ஹவாலா முகவர்கள் பெரிய தொகையை கமிஷனாக பெற்றுக்கொள்வார்கள். இப்போது, அமெரிக்காவில் இருந்து ஒருவர் இந்தியாவிற்கு பணம் அனுப்ப வேண்டுமென்றால். அமெரிக்க டாலரில் பணத்தை அங்குள்ள ஹவாலா முகவரிடம் கொடுத்து ரகசிய எண்ணை வாங்கிக்கொண்டு இதியாவில் யாருக்கு அந்த பணம் போக வேண்டுமோ அவரிடம் கூறிவிட்டால் அதே மதிப்பிற்கு நிகரான பணத்தை இந்தியாவில் உள்ள முகவர் இங்குள்ள நபரிடம் கொடுத்து விடுவார்.
இது அரசுக்கு தெரியாமல் நடக்கும் விஷயம் என்பதால் மட்டுமல்ல மதம் மாற்றுதல் மற்றும் தீவிரவாத அமைப்புகள், கருப்பு பணத்தை வெள்ளையடித்தல் உள்ளிட்ட சட்ட விரோதமான தொழில்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படகூடியது என்பதால் இதனை சட்ட விரோதமானது என்று அரசு அறிவித்துள்ளது.
இதனை இயக்குனர் ஷங்கர், தான் இயக்கிய சிவாஜி படத்தில் வெளிச்சம் போட்டு காட்டியிருப்பார்கள். படத்தின் ஹீரோவான ரஜினி அரசியல் வாதிகளிடம் இருந்து பறித்த பணத்தை இங்குள்ள ஹவாலா முகவரிடம் கொடுத்து விடுவார். அப்போது, இங்குள்ள ஒரு முகவர் ஒரு ரகசிய எண்ணை கொடுப்பார். அதனை ரஜினியே வெளிநாட்டிற்கு சென்று வாங்கிக்கொள்வார். இது தான் ஹவாலா.
இதனால் தான் நமது மத்திய அரசு ஒரு தனி நபர் ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக பணத்தை கையில் வைத்திருக்க கூடாது. வங்கியில் தான் வைத்திருக்க வேண்டும் என்று சட்டம் போட்டுள்ளது. ஆனால், இது மக்கள் விரோத செயல் என சில கட்சிகள் எதிர்க்கும். இப்போது, தெரிந்திருக்கும் அந்த கட்சிகள் மக்களுக்கு ஆதரவாக பேசவில்லை. யாருக்கு ஆதரவாக பேசியுள்ளார்கள் என்று.
முன்பு இருந்த அரசுகளை காட்டிலும் இப்போது உள்ள மத்திய அரசு நாட்டின் முன்னேற்றத்தில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இவை நேரடியாக மக்களை பாதிக்க கூடியது என எதிர்கட்சிகள் முழக்கமிடும். ஆனால், உண்மை அதுவல்ல. ஆனால், சில நேரம் சில திட்டங்கள் மக்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கலாம் ஆனால், தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்தால் அது தேவையானது தான் என்று நமக்கே தெரிய வரும்.


