அஜித் செய்தால் தான் நன்றாக இருக்கும் - வெளிப்படையாக கூறிய குற்றாலீஸ்வரன்


90'களில் பிருந்தவர்களுக்கு இவர் பெயரை எப்போதுமே மறக்க முடியாது. பள்ளிப்பாட புத்தகத்தில் இடம் பெரும் அளவுக்கு நீச்சல் போட்டியில் சாதனை படைத்தவர் இந்த குற்றாலீஸ்வரன். 

கடந்த பல வருடங்களாக ஆள் எங்கிருக்கிறார் என்ன செய்கிறார் என்று பேசப்படாத இவர் சமீபத்தில் புகைப்படத்துடன் வைரலாக்கப்பட்டார். அஜித் அவர்கள் அவரை சந்திக்க செய்தி வெளியானது. தலயுடனான சந்திப்புக்கு பிறகு குற்றாலீஸ்வரன் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். 


அப்போது அவரிடம், ஒரு வேளை உங்கள் கதையையே படமாக எடுத்தால் எந்த நடிகர் சரியாக இருப்பார் என கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அவர் அளித்த பதில் பலரையும் ஷாக் ஆக்கியது. 


ஆம், அஜித் சார் நடித்தால் தான் நன்றாக இருக்கும். ஏனென்றால், அவர் ஏற்கெனவே விளையாட்டுகளில் அதிக ஆர்வம் உள்ளவர் என கூறியுள்ளார்.
Previous Post Next Post
--Advertisement--