இதை நாங்கள் செய்திருந்தால் "ஐட்டம்" என கூறி இருப்பார்கள் - எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி..!


தமிழ் பிக்பாஸ் 3 வீட்டில் பல காதல் கதைகள் ஓடிக்கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி தொடங்கியே 50 நாள் தான் ஆகியுள்ளது. அதற்குள், காதல்கள், ப்ரேக்-அப்கள் எல்லாம் வந்து சென்றுவிட்டன. காதலிக்க ஒரு குருப்பு அதனை பிரித்து வைக்க ஒரு குருப்பு என நாரி நசநசக்கிறது பிக்பாஸ். 

இதில், கவின்-லாஸ்லியா, தர்ஷன்-ஷெரின், அபிராமி-முகேன் அகிய ஜோடிகள் காதல் விவகாரம் தான் வெளியில் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 


அதிலும், சீரியல் நடிகர் கவின் ஃபன் பண்றேன் என்று கூறி நான்கு பெண்களை காதலிப்பதாக கூறப்பட்டது கடும் விமர்சனத்திற்க்கு உள்ளாகியுள்ளது. 


இந்நிலையில், பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பான "எங்க வீட்டு மாப்பிள்ளை" என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை அபர்ணதி அளித்துள்ள பேட்டியில் "கவின் செய்ததை ஒரு பெண் செய்திருந்தால் ஐட்டம் எனபச்சை குத்தியிருப்பார்கள்" என கூறியுள்ளார்.
Previous Post Next Post