தமிழ் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ரசிகர்கள் பலருக்கும் பிடித்த போட்டியாளர்களில் ஒருவராக இருக்கிறார் இலங்கையை சேர்ந்த மாடல் மற்றும் நடிகரான தர்ஷன்.
அவர், இளம் நடிகை சனம் ஷெட்டி என்பவரின் காதலர் என கூறப்படுகிறது. இந்நிலையில் தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டி ஜோடியாக நடித்துள்ள படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்கள்.
இந்த படத்திற்கு மேகி என பெயர் வைத்துள்ளனர். "MAGIE" என ஆங்கிலத்தில் வருகிறது. ஆனால் "MAGGY" என மற்றொரு தமிழ் படமும் உருவாகி வருவதால் இந்த படத்திற்கு டைட்டில் சிக்கல் வந்துள்ளது.
இதனால், தர்ஷன் படத்திற்கு வரும் நாட்களில் பெரிய பிரச்சனை வரலாம் என கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியால் மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ள தர்ஷனின் முதல் படமே இப்படி ஒரு தலைப்பு சிக்கலில் சிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.