ஹிந்தியில் நடிகை கங்கனா ரணாவத் நடித்த படம் ‛குயின்'. இந்த படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் தயாராகியுள்ளது. இதில் பாரிஸ் பாரிஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பதிப்பை, நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்க, காஜல் அகர்வால் நாயகியாக நடித்துள்ளார்.
பல மாதங்களுக்கு முன்பே படப்பிடிப்பு முடிந்துள்ள இப்படம், இப்போதுதான் ரிலீஸிற்கு தயாராகியுள்ளது. ஆனால் தணிக்கைக்குழுவிற்கு திரையிடப்பட்டபோது, பல காட்சிகளுக்கு அதிருப்தி தெரிவித்து கத்தரிக்க சொன்னவர்கள், சில காட்சிகளின் வசனங்களை மியூட் செய்யுமாறு கூறியுள்ளார்களாம்.
ஆனால், அந்த காட்சிகளை நீக்க முடியாது என கூறி அதை ஏற்றுக்கொள்ளாத படக்குழு, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்போது மறு தணிக்கை செய்ய ரிவைசிங் கமிட்டிக்கு சென்றுள்ளார்கள்.
அதனால் இன்னும் சில தினங்களில் பாரிஸ் பாரிஸ் படத்திற்கு எத்தனை கட் கொடுத்துள்ளனர். என்ன சான்றிதழ் வழங்க போகிறார்கள் என்கிற விவரம் வெளியாகும் எனவும் தொடர்ந்து படத்தில்rரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.