பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகர் சரவணன் வெளியேற்றப்பட காரணம் நாங்கள் பெண்கள் மீது வைத்துள்ள மரியாதை தான் என்று கூறி நடிகர் சரவணனை வெளியேற்றியுள்ளது பிக்பாஸ் குழு.
ஆனால், அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட பிறகு சரவணன் பேச்சு மீதான எதிர்ப்புகள் எல்லாம் மறைந்து விட்டன. இந்நிலையில், எதற்காக இந்த விஷயத்தை மீண்டும் தூசு தட்டி சரவணன் வெளியேற்றப்பட்டார் என்று ரசிகர்கள் பலரும் குழம்பித்த்தான் போனார்கள்.
இந்நிலையில், சரவணன் வெளியேற்றத்திற்கு இது தான் காரணம் என ரசிகர்கள் பலரும் ஒரே கருத்தை கூறி வருகிறார்கள். நேற்றைய நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் ஆள் மாற்றி ஆள் கேள்வி கேட்கும் ஒரு டாஸ்கினை போட்டியாளர்களிடம் செய்து காட்ட சொல்லி ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு கேள்வியை கேட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது, சரவணன் பக்கம் வரும் போது " அவன் கோர்த்து விடுறான் டா..!" என்று சரவணன் குரல் வந்ததை பலரும் கவனித்திருப்பீர்கள். சரவணன் யாரை குறிப்பிட்டு அப்படி கூறினார் என்று சரியாக தெரியவில்லை. ஆனால், ரசிகர்கள் கமல்ஹாசனை தான் சரவணன் அவ்வாறு கூறினார் எனவும் அதன் காரணமாக தான் ஒரு வாரம் கழித்து இப்போது சரவணனை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர் என்றும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.