அந்த மாதிரி படங்களில் நடித்து இளசுகள் மத்தியில் பிரபலமானவர் சன்னி லியோன். அந்த பிரபலத்தை வைத்துக்கொண்டு பாலிவுட் சினிமாவில் நுழைந்து ஒரு கலக்கு கலக்கினார்.
தொடர்ந்து பாலிவுட் பட வாய்ப்புகள் வரவே அந்த படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு சினிமாவில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். தவிர, தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஒன்றில் ஒரு காட்சியில் ஒரு தொலைபேசி எண்னை கூறியிருப்பார். இதனை பார்த்த ரசிகர்கள் சும்மா விடுவார்களா..? அந்த எண்ணுக்கு சொந்தமான புனித் என்பவருக்கு தொடர்ந்து போன் செய்து அவரை போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று புகார் கொடுக்க வைத்துவிட்டார்கள்.
இதனை அறிந்த நடிகை சன்னி லியோன், படத்தில் தெரியாமல் பொத்தாம் பொதுவாக ஒரு எண்னை கூறினேன். அது ஒருவரின் நிம்மதியை பறித்துள்ளது என்பது எனக்கு வேதனையாக உள்ளது. நான் அவரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
அதே சமயம், சுவாரஸ்யமான நபர்களிடமிருந்து அவர் பேசியிருப்பார் என நம்புகிறேன் என்று கிண்டலாக ஒரு சில வார்த்தைகளையும் பதிவு செய்துள்ளார் நடிகை சன்னி.
Tags
sunny leone