நமுத்துபோன ப்ளைவுட்-டை உடைத்த முகென் - என்ன இதெல்லாம் - முகெனை கலாய்க்கும் பிக்பாஸ் ரசிகர்கள்..!


பிக்பாஸ் வீட்டில் இருந்து ஐந்து போட்டியாளர்கள் வெளியே அனுப்பிவிட்டார்கள். இன்று நடிகை ரேஷ்மா வெளியேற்றப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

காரணம், தேய்ந்து போன ரெக்கார்டு போல ஒரே கதையை ஒட்டிக்கொண்டிருந்த நடிகை ஷாக்சி அல்லது கவின் ஆகிய இருவரில் ஒருவர் தான் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்களை வெளியே அனுப்பி விட்டால் இந்த வாரத்தை ஓட்ட முடியாது என எண்ணி ஒன்றும் அறியாத புள்ளை பூச்சியாக இருந்த ரேஷ்மா-வை வெளியே அனுப்பி விட்டார்கள். 


நிகழ்ச்சி முடிந்து நாளைய எபிசோடின் சில காட்சிகளின் ப்ரோமோ வெளியானது. அதில், நடிகை அபிராமி ஷாக்சியிடம் "ஒவ்வொரு முறையும் உன்னால் தான் இப்படி நடக்கிறது..ஷாக்சி" என கோபாமாக கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு எழுந்து செல்கிறார் அபிராமி. அடுத்த காட்சியில், நீயே வித்தியாசத்தை பார்த்துக்கொள் என முகெனிடம் அபிராமி எதையே கூற அருகில் இருந்த கட்டிலை ஆக்ரோஷமாக அடித்து உடைக்கிறார் முகென். 


இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், பிக்பாஸ் வீட்டுல பாக்குறதுக்கு தான் எல்லாம் பகுமானாமா, அழகா இருக்கு..? உள்ள எல்லாம் டம்மியா..? என்ன பிக்பாஸ் இதெல்லாம் என்று கலாய்த்து வருகிறார்கள்.

இன்னும் சில ரசிகர்கள், நீ அடிச்சு ஒடச்சது தேக்கு மரம் இல்ல.. மழை ஈரத்துல நமுத்து போன ப்ளைவுட்டு...!  என முகெனை கிண்டலடித்து வருகிறார்கள்.
Previous Post Next Post