படம் ப்ளாக் பஸ்டர் ஆனதும் பிரபாஸுக்கு போன் செய்த அஜித் - என்ன படம்.? - என்ன கூறினார் தெரியுமா..?


பாகுபலி நடிகர் பிரபாஸ் தற்போது சாஹோ என்ற பிரமாண்ட படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள நடிகர் பிரபாஸ் தல அஜித் குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார். 


தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த நடிகர் அஜித்திற்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்த படம் "பில்லா". இந்த படம் 1980-ம் ஆண்டு வெளியான ரஜினியின் பில்லா படத்தின் ரீமேக் ஆகும். 


இந்த படத்தை பார்த்த நடிகர் பிரபாஸ் தெலுங்கு ரீமேக் உரிமையை வாங்கி அப்படியே தெலுங்கு ரீமேக்கினார். தெலுங்கிலும் மிகப்பெரிய ஹிட் கொடுத்து பிரபாசுக்கு என தனி ரசிகர் வட்டம் உருவாக இந்த படம் காரணமாக இருந்தது.

இந்த படம் வெளியான பின்பு நடிகர் அஜித் தெலுங்கு பில்லா படக்குழுவை தொடர்பு கொண்டு தனது வாழத்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடைய வாழத்துக்களை பிரபாஸிடமும் கூறி விடுங்கள் என்றும் கூறியுள்ளார். இதனை பிரபாஸ் விழா மேடையிலேயே கூற அரங்கம் அதிர விசில் சத்தம் பறந்தது.

Advertisement