அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் பிகில். இப்படத்தில் விஜயக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மெர்சல், சர்கார் படங்களை தொடர்ந்து பிகில் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். முதல் முறையாக ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் விஜய் ‘பிகில்’ படத்தில் ‘வெறித்தனம்’ என்ற பாடலை பாடியுள்ளார்.
இந்நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரபல நடிகர், விஜய் கட்டிப்பிடித்ததை என்னால் மறக்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார். பிகில் படத்தின் ஷூட்டிங் கிட்டதட்ட முடிந்து விட்ட நிலையில், ஒரே ஒரு சண்டை காட்சி மட்டும் பாக்கி உள்ளது.
இன்னும் ஓரிரண்டு வாரங்களில் அதுவும் முடிந்துவிடும். தொடர்ந்து, தான் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டன என நடிகர் சவுந்தரராஜா கூறியுள்ளார்.
மேலும் ‘இப்படத்தில் விஜய் அண்ணாவுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. கிட்டத்தட்ட 30 நாட்கள் அவருடன் நடித்துள்ளேன். அவரது எளிமையை சொல்ல வார்த்தைகளே இல்லை.
குறிப்பாக அவர் என்னை கட்டிபிடித்ததையும், சிரிப்பையும் என்னால் மறக்க முடியாது. இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கிய இயக்குனர் அட்லீக்கு மிகப்பெரிய நன்றி’ என்று கூறியுள்ளார்.
Tags
Bigil Movie