தளபதி விஜய் நடித்து முடித்துள்ள படம் பிகில். இந்தப் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு விருவிருப்பாக உள்ளது. படத்தில் கிராபிக்ஸ் வேலைகள் அதிகம் இருப்பதால் இரவு,பகல் பாராமல் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில், இந்தப் படத்தின் இசை வெளியீடு சம்பந்தமாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் நடிப்பிலும், அட்லி இயக்கத்தில் உருவாகும் படம் பிகில். ஏற்கனவே இருவரும் இணைந்து தெறி, மெர்சல் ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கின்றனர்.
அதனால், இந்த பிகில் படமும் வெற்றி படங்களில் வரிசையில் இடம் பெறும் என விஜய் ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர். இந்தப் படத்துக்கான போஸ்டர் ஏற்கனவே நடிகர் விஜய் பிறந்த நாளில் வெளியிடப்பட்டது.
இதற்கிடையில், படத்தில் விஜய் நடிக்கும் காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டதால், கடந்த வாரம் சூட்டிங்குக்கு வந்த நடிகர் விஜய், தன்னோடு நடித்த அனைவருக்கும் பிகில் என எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட தங்க மோதிரத்தை நினைவுப் பரிசாக, படத்தில் பணியாற்றிய நானூறு பேருக்கு வழங்கினார்.
இது படக் குழுவினர் மத்தியில் பரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்க, அடுத்த மாதம் முதல் வாரம் படத்துக்கான இசை வெளியீட்டு விழாவை மிகப் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு முடிவெடுத்து, அதற்கான காரியங்களில் தீவிரமாக இறங்கி உள்ளனர். இதற்காக மேடை அமைக்கும் பணியில் மேடை அமைப்பாளர்கள் தீவிரமாக களம் இறங்கி இருக்கின்றனர்.
Tags
Bigil Movie