"நான் எதை செய்தாலும் குறை கூறும் ரசிகர்களுக்கு....." - மீரா மிதுன் வீடியோவால் கடுப்பான ரசிகர்கள்


பிக் பாஸ் 3 போட்டியாளர் மீரா மிதுன் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். இவருக்கு இயக்குநர் சேரனுடன் பிரச்னை ஏற்பட்டதால் அதுவே அவருடைய வெளியேற்றத்துக்குக் காரணமாக அமைந்துவிட்டது. 


டாஸ்க் ஒன்றில் இயக்குநர் சேரன் வேண்டுமென்றே கோபத்தில் தன்னை இழுத்து வெளியே தள்ளியதாக அவர் மீது குற்றம் சாட்டினார் மீரா மிதுன். ஆனால் குறும்படம் வழியாக மீரா சொன்னது தவறு எனத் தீர்ப்பளித்தார் கமல். 

இந்தப் பிரச்னை வரும்வரை மக்கள் வாக்குகள் உங்களுக்கு இருந்தன. இந்த விவகாரத்துக்குப் பிறகு வாக்குகள் குறைந்துவிட்டன என்று மீராவிடம் கூறினார் கமல்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி ரகசிய அறையில் மீரா மிதுன் தங்க வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிரந்தரமாகவே அனுப்பி விட்டார்கள். இதனை தொடர்ந்து வெளியே வந்த மீரா தன் மீது உள்ள நியாயங்களை பல பேட்டிகளில் கூறி வருகிறார்.

அந்த வகையில், நான் எதை செய்தாலும் குறை கூறும் ரசிகர்களுக்கு என்னுடைய நன்றி என்று கூறி ஒரு வீடியோவை வெளியிட்டு அவர்களை மேலும் கோபப்படுத்தியுள்ளார்.
 
Previous Post Next Post
--Advertisement--