நடிகர் சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘8 தோட்டாக்கள்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மீரா மிதுன். இவருக்கு ‘முக-நூல்’ மூலம் எழும்பூரை சேர்ந்த தொழில் அதிபர் ஜோ மைக்கேலுடன் கடந்த 2017-ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டது.
நண்பர்களாக பழகி வந்த இவர்களிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பண பிரச்சினையால் மோதல் ஏற்பட்டது. பின்னர் இருவரும் மாறி, மாறி போலீசில் புகார் அளித்தனர். இந்த பிரச்சினைகளுக்கு இடையே ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்க மீரா மிதுன் சென்றார்.
ஜோ மைக்கேல் அளித்த புகாரின் பேரில் எழும்பூர் போலீசார் ‘பிக்பாஸ்’ வீட்டுக்கு நேரில் சென்று மீரா மிதுனிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் ‘பிக்பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
யூ-ட்யூபை ஒப்பன் பண்ணா என்ன பத்தி என்னன்னமோ பேசி வச்சி இருக்கான் அந்த ஜோ மைக்கேல். இதெல்லாம் உண்மையில்லை. நான் எந்த குற்றமும் செய்யவில்லை என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்த சர்ச்சை எல்லாம் ஒரு பக்கம் போய் கொண்டிருக்க இன்னொரு பக்கம் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் பப்பில் சால்சா நடனம் ஆடும் வீடியோக்கள் அடுத்த பட அறிவிப்புகள் என தன்னை பிசியாகவே காட்டிக்கொள்கிறார் மீரா மிதுன்.
அந்த வகையில், என்னை முத்தமிடுங்கள் என்று கூறி தற்போது ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சகட்டு மேனிக்கு கழுவி ஊத்தி வருகிறார்கள்.