"கண்ட நாள் முதல்" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ரெஜினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் அமைதியான பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து கவர்ச்சியாக களமிறங்கிய ரெஜினா தொடர்ந்து பல தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் விஷ்ணு விஷாலுடன் இவர் நடித்திருந்த சிலுக்குவார்பட்டி சிங்கம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது.
மேலும் இவர் நடித்துள்ள பார்ட்டி, நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் தற்போது பாலிவுட் இயக்குநர் ஷெல்லி சோப்ராதர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏக் லடிக்கி கோ தேகா தோ ஐசா லகா’ படத்தில் ரெஜினா லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படவாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானலும் கவர்ச்சி காட்ட தயராக இருக்கும் இவர் அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் பார்வையை தன் பக்கம் திருப்புவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து லைக்குகளை குவித்து வருகின்றன.
Tags
Regina Cassandra