பிக்பாஸ் ரைசா இப்போது எப்படி மாறிவிட்டார் பாருங்க - ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த புகைப்படம்


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும், சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தாலும், அதையும் தாண்டி அனைவரையும் பார்க்க வைத்த ஒரு நிகழ்ச்சி என்றால் அது உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி எனலாம். 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பு இரண்டாவது சீசனுக்கு கிடைக்கவில்லை. காரணம் முதல் சீசன் பார்த்து உஷாரான போட்டியாளர்கள்... இரண்டாவது சீசனை நிறுத்து நிதானமாக தங்களுடைய சுய ரூபத்தை வெளிக்காட்டாமல், விளையாடியதாக பலர் விமர்சித்தனர். 


பிக் பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு பிறகு அதிகம் பிரபலமடைந்தவர் ரைசா தான். மாடலிங் துறையின் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், தற்போது தமிழ் ரசிகர்களிடம் பிரபலமாகி கதாநாயகியாக நடித்து வருகிறார். 


இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படத்தில் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இப்போது, அலைஸ் மற்றும் காதலிக்க யாருமில்லை என இரண்டு படங்களில் நடித்து வருகிறார் அம்மணி. 

இந்நிலையில், சாமியார் போல மாறி "ரைசானந்தா" மாறியுள்ள இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.