அடேங்கப்பா..! ஐந்து நிமிடம் நடனமாட சாஹோ பட இளம் நடிகைக்கு இத்தனை கோடி சம்பளமா..? - ஷாக்கிங் தகவல்


பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் ஹீரோவாக நடித்து வரும் படம் சாஹோ.ஷ்ரத்தா கபூர் இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கிறார். 

இவர்களுடன் ஜாக்கி ஷெராப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, ஈவ்லின் சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷங்கர் - இசான் - லாய் ஆகியோர் இசையமைத்துள்ளனர். 


ரூ.350 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தை யூவி என்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அருண் விஜய் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 


இந்தப் படத்தை சுஜீத் எழுதி இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் ஆகஸ்ட் 30-ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது இந்த படம். இந்நிலையில், சில நாட்கள் முன்பு இந்த படத்தின் 'Bad Boy' என்ற பாடல் ரிலீஸ் ஆனது. அதில் பிரபாஸ் உடன் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் படுகவர்ச்சியாக ஐட்டம் நடனம் போட்டிருக்கிறார்.

இலங்கையை சேர்ந்த அவர், இவ்வளவு கவர்ச்சியாக ஆட இரண்டு கோடி ருபாய் சம்பளமாக பெற்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 

தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்கள் ஒரு முழு படத்திற்கு வாங்கும் சம்பளத்தை இவர் ஐந்து நிமிட பாடலுக்கு நடனம் மட்டும் ஆடி பெற்றுள்ளார.
Previous Post Next Post