லாஸ்லியா இலங்கையின் கிளிநொச்சியில் ஒரு கிறித்தவக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தாயும், தந்தையும் இலங்கையின் யாழ்பாணத்தைச் சேர்ந்தவர்கள்.
பின்னர் அவர்கள் திருக்கோணமலைக்கு இடம்பெயர்ந்தனர். இவர் தன் கல்வியை திருக்கோணமலையில் தொடர்ந்தார்.இவர் நான்கு ஆண்டுகளாக கொழும்புவில் வசித்துவந்த நிலையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
பின்னர் தன் பணியில் இருந்து விலகி ஊடகத்தில் செய்தி வாசிப்பாளராக இணைந்தார். எப்படியாவது பிரபலமாகிவிட வேண்டும் என்ற ஆசையில் இருந்த இவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு வரவே ஒப்புக்கொண்டு தமிழ் பிக்பாஸ் சீசன் 3-யில் போட்டியாளராக 60 நாட்களை கடந்து விட்டார்.
இவருக்கு ஆதரவு தருபவர்கள் ஒரு பக்கம் இருந்தால். அதே அளவுக்குஎதிர்ப்பு தெரிவிப்பவர்களும் ஒரு பக்கம் இருக்கிறார்கள். இந்நிலையில், இவரது பள்ளிப்பருவ வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள், இப்போது உள்ள அதே பாடி லேங்குவேஜ் தான் அப்போதும் இருக்கிறது என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ,
Tags
Losliya