மதுமிதா தற்கொலை முயற்சி - இது தான் காரணம் - வைரலாகும் வீடியோ இதோ


பிக்பாஸில் இருந்து அதிக ஓட்டுகளை பெற்று வந்த மதுமிதா வெளியேறியது பார்வையாளர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிக்பாஸின் மிக முக்கிய விதியான தற்கொலைக்கு முயற்சி செய்ய கூடாது என்பதை அவர் மீறியுள்ளதால் அவர் வெளியேற்றப்பட்டுள்ளார். நீச்சல் குளத்தில் தண்ணீர் இல்லாத விவகாரத்தில் கர்நாடகா காரர்கள் போல வருணபகவானும் தண்ணீர் தர மறுக்கிறார் என்று கிண்டலாக பேசிய மதுமிதாவை கண்டு கர்நாடகாவை சேர்ந்த நடிகை ஷெரின் மல்லு கட்ட, அவருடன் சக ஆண் போட்டியாளர்களும் சேர்ந்து கொண்டு மதுமிதாவை வார்த்தைகளால் துளைத்து அவரை தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கொண்டு சென்று விட்டார்கள். 


சட்டப்படி பார்த்தால், அவர்கள் எல்லோரின் மீதும் தற்கொலை செய்ய தூண்டுதல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். ஆனால், அந்த காட்சிகள் எதையும் ஒளிபரப்பாமல் எஸ்கேப் ஆகி விட்டது பிக்பாஸ் குழு.  நடிகர் கமல்ஹானும் தன்னுடைய பங்கிற்கு சில சப்பை கட்டுகளை கட்டி மதுமிதாவை வழியனுப்பி வைத்தார். 


இந்த பிரச்சனைக்கு மூல காரணமே கமல்ஹாசன் தான். காரணம், அவர் தான் பிக்பாஸ் வீட்டில் நீச்சல் குளத்தில் நீரை நிரப்ப வேண்டாம் என்று கூறியவர். கோடை காலத்தில் வழக்கமாக ஏற்படும் தண்ணீர் பஞ்சத்தை பெரிது படுத்தி அரசியல் செய்தன எதிர்கட்சிகள். அதில், கமல்ஹாசனும் தன் பங்கிற்கு தமிழ்நாட்டில் தண்ணீரே இல்லை.  இது வாழ்வதற்கு தகுதியற்ற நிலம் என்று கூறுவது போல அந்த ஒன்றையணா நீச்சல் குளத்தில் தண்ணீரை நிரப்பமால் அந்த நிகழ்சியை பார்க்கும் கோடிக்கணக்கான மக்கள் மத்தியில் அரசின் மீது வெறுப்பை உண்டாக்கும் நோக்கில் இப்படி நீச்சல் குளத்தில் நீரை நிரப்பாமலேயே கடந்த ஐம்பது நாட்களாக நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். 

இவரின் இந்த மறைமுக அரசியல் செயல் முதலில் சாண்டியின் தவடா-வை பழி வாங்கியது. இப்போது மதுமிதாவின் கையை பதம் பார்த்திருக்கின்றது. இன்னும் என்னென்ன நடக்கபோகுதோ..? மேலும், மதுமிதாவின் இந்த செயலுக்கு வீட்டில் உள்ள பெண்களுக்கு ஆதரவாக ஆண்களுடன் மல்லுக்கு நின்று அவர்களது கோபத்திற்கு ஆளானதும் ஒரு காரணம். 

இதனால் டென்ஷனான கவீன் மதுமிதாவை சில தகாத வார்த்தைகளால் தற்கொலைக்கு தூண்டியதாக கூறப்படுகிறது. ஆனால் மதுமிதா தற்கொலைக்கு முயற்சி செய்ததற்கு காரணம் ஆண்கள் மட்டும் இல்லை, சில பெண்களும் தான் என்பது கீழே உள்ள வீடியோவின் மூலம் தெரியவருகிறது.
Previous Post Next Post