பிரேமம் படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களையும் தன்வசபடுத்திய சாய் பல்லவி, தெலுங்கு திரை உலகில் அதிக படங்கள் நடித்து விருதுகள் பெற்று உள்ளார்.
பிரேமம், கலி போன்ற மலையாள படங்கள் தொடர் வெற்றி, அதே போல தெலுங்கு மொழியில் தொடர்ந்து இரண்டு வெற்றி படங்களை அளித்தார்.
ஆனால், தமிழ் மொழியில் நடித்த தியா, மாரி-2 போன்ற படங்கள் பெரிதாக பேசப்படவில்லை, இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள்.
மேற்கொண்டு தமிழில் வெளியான NGK மற்றும் தெலுங்கில் வெளியான Padi Padi Leche Manasu போன்ற படங்கள் மண்ணை கவ்வி தயாரிப்பாளர்கள் தலையில் துண்டை போட்டன.
இதனால்,அப்செட்டில் இருக்கும் நடிகை சாய்பல்லவி. இனிமேல், எனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடிப்பேன். தயவு செய்து ஹீரோக்களுடன் டூயட் பாடும் கதாபாத்திரங்களுக்கு அழைக்காதீர்கள் என்று கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் கூறி வருகிறாராம்.
இதனால், தெலுங்கில் பல முன்னணி நடிகர்களின் படங்களை தவிர்துள்ளாராம் சாய் பல்லவி. பெரும்பாலும் ஹீரோகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களே அதிகம் என்பதால்,
அவற்றை சாய் பல்லவி நிராகரித்தால் விரைவில் அவரது மார்க்கெட்
குறைந்துவிடும், இதெல்லாம் நல்லதுக்கில்ல என விவரம் அறிந்த பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
Tags
Sai Pallavi