"முதன் முதலில் பார்த்தேன்.. காதல் வந்ததே.." ஹீரோ ராஜீவ் கிருஷ்ணா என்ன ஆனார்..? - இப்போது என்ன செய்கிறார் பாருங்க..!

கடந்த 1997-ம் ஆண்டு வெளியான "ஆஹா" என்ற தமிழ் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இடம் பெற்ற "முதன் முதலில் பார்த்தேன், காதல் வந்ததே.." என்ற பாடல் இன்றளவும் பலரின் ஃபேவரைட் பாடலாக உள்ளது.
இந்த பாடதிற்கு பிறகு இவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்று பத்திரிக்கைகள் எழுதின. ஆனால், நடந்தது வேறு, அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. 


தொடர்ந்து,  2010-ம் ஆண்டு அஜித்குமார் நடிப்பில் வெளியான "அசல்" திரைப்படத்தில் "Vicky" என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிறகு, 2015-ம் ஆண்டு "என் வழி தனி வழி" என்ற படத்தில் வில்லனாக தோன்றினார்.

இவர் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சுரேஷ் சந்திரா மேனனின் உறவினர் ஆவர். இப்போதும் பட வாய்புகள் கிடைத்தால் நடிப்பதற்கு தயாராக உள்ள இவர், வசனம் எழுதுதல் மற்றும் திரைக்கதை அமைத்தல் போன்ற வேலைகளையும் செய்து வருகிறார்.