தமிழில் ரஜினியுடன் லிங்கா திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகையை, போலீஸார் கைது செய்வது போல் இணையத்தில் வெளியான வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோனக்ஷி சின்ஹா பாலிவுட்டில் பல வெற்றிப் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக லிங்கா திரைப்படத்தில் நடித்தார்.
இந்நிலையில் சோனாக்ஷி சின்ஹா கைது செய்யப்படுவது போல் ஒரு வீடியோ இணையத்தில் வைராலாக பரவி வருகிறது. "என்னை இப்படி நீங்கள் கைது செய்ய முடியாது..? நான் யார் என்று தெரியுமா..? நான் எதுவும் செய்யவில்லை..? எப்படி நீங்கள் என்னை கைது செய்யலாம்..? " என கதறுகிறார். நிஜமாகவே அவரை போலீஸார் கைது செய்கின்றனரா? அல்லது இது அவரது அடுத்த திரைப்படத்திற்கான புரொமோவா என்று தெளிவாக கூறமுடியவில்லை.
சமீபத்தில் வால்மீகி சமூகத்தை குறித்து ஷோனாக்ஷி சின்ஹா அவதூறாக பேசியதாக கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் தற்போது அவர் கைது செய்யப்படுவது போல் வீடியோ வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
— Saurabh Malhotra (@MalhotraSaurabh) August 6, 2019
This is shocking news to see such a big celebrity arrested— Mom's Queen (@garbadandiya) August 6, 2019
#AsliSonaArrested @sonakshisinha pic.twitter.com/phKj88aWzJ
Tags
Sonakshi Sinha