அஜித் இடது கையில் தான் டீ, காபி குடிப்பார் - சேரன் சொன்ன விஷயம் - அதன் பின் இருக்கும் குட்டி லாஜிக் இது தான்..!


இன்றைய பிக்பாஸ் எபிசோடில் சரவணன், சேரன் சண்டை பிராதான இடம் பெற்றது. இதனிடையே நடிகர் கவின் அஜித் போல சில விஷயங்களை செய்யவில்லை. 

நான் கவினிடம் கூறினேன் அஜித் எப்போதுமே வலது கையில் டீ,காபி சாப்பிட மாட்டார். இடது கையை தான் பயன்படுத்துவார் என்று ஆனாலும் கவின் அதை திருத்தி கொள்ளவில்லை என்று கூறினார்.


அது சரி, அஜித் எதுக்கு இடது கையில் டீ, காபி குடிக்கிறார் என பலருக்கும் தோன்றும் ஒரு கேள்வி. அதற்கு பின்னால் ஒரு குட்டியான லாஜிக் இருக்கு பாஸ். 


ஆம், பொதுவாக இடது கை பழக்கம் உள்ளவர்கள் உட்பட 98% பேர் வலது கையில் தான் டீ,காபியை குடிப்பார்கள். ஒருவர் வலது கையில் கோப்பையை எடுத்து அருந்தும் போது ஒரு பக்கம் எச்சில் படும். ஆனால், இடது கையில் எடுத்து குடித்தால் மறு பக்கம் எச்சில் படும். 

என்னதான் கோப்பையை சுடு தண்ணீரில் கழுவி விடுகிறார்கள் என்றாலும் 98% சதவிதம் பேர் கோப்பையை வலது கையில் எடுத்து ஒரு பக்கம் அதிகப்படியான எச்சில் செய்துள்ளனர். ஆனால், இடது கையில் வெறும் 2% பேர் தான் குடிக்கிரார்கள். இதனால் தான் அஜித் காப், டீ அருந்தும் போது இடது கையை பயன்படுத்துகிறார்.

மேலும், நடிகர் அமிதாப் பச்சன், ஷாருக்-கான் , சல்மான் கான் மற்றும் சில பாலிவுட் நடிகர்கள் மற்றும் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஆகியோர் இதே முறையை தான் பயன்படுதிகிறார்கள் என்பது உபரி தகவல்.ou May Like