காதலனுடன் லிப்லாக் - விவாகரத்தான நடிகை அதிதி ராவ் ஹைதாரி வெளியிட்ட புகைப்படம்..!


காதலனுடன் லிப்-லாக் என்றது ஷாக் ஆகி விடாதீர்கள். காதலன் என்று அதிதி ராவ் குறிப்பிட்டிருப்பது அவர் வளர்க்கும் நாயைத்தான். மணிரத்தினம் இயக்கிய காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரீ ஆனவர் அதிதி ராவ். தனது முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை வென்று அனைவரின் கவனத்தை ஈர்த்தார். 

அந்த வெற்றியை தொடர்ந்து மீண்டும் மணிரத்தினம் இயக்கத்தில் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களையும் தொடர்ந்து தற்போது மீண்டும் மூன்றாவது முறையாகவும் மணிரத்தினம் இயக்கத்தில் "நவாப்" என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்தது. 


மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் படு பிசியாக நடித்து வரும் அதிதிக்கு தற்போது 32 வயதாகிறது. இவர் தனது 21 வயதிலே திருமணம் ஆகி பின்னர் விவாகரத்து பெற்றவர் . அதிதி ராவ் சினிமா துறைக்கு வரும் முன்னரே திருமணம் செய்து கொண்டவர். 


ஆனால், தனக்கு திருமணமானதை முதலில் மறுத்த இவர் பின்னர் 2013 ஆம் ஆண்டு தனக்கு 21 வயது இருக்கும் போதே சத்ய தீப் மிஸ்ரா என்பவருடன் திருமணம் நடந்தது என்றும், பின்னர் கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விட்டோம் என்றும் கூறினார். 

இந்நிலையில், தான் செல்லமாக வளர்க்கும் நாய்க்கு லிப்-லாக் முத்தம் கொடுப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டு " ஐ லவ் யூ டாகி, உன்னுடன் இருப்பது தான் சொர்க்கம். நீ தான் என்னுடைய உண்மையான காதலன்" என்று குறிபிட்டுள்ளார். 


Advertisement