நடிகை சினேகா கொஞ்ச காலமாக பெரிய அளவில் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வந்தார். ஆனால், நகைக் கடை திறப்பு உள்ளிட்ட தனியார் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தார்.
இந்நிலையில், அவர் கன்னடத்தில் எடுக்கப்படும் புராண படம் ஒன்றில் திரவ்பதியாக நடிக்கிறார். அர்ஜுன் கர்ணனாகவும், சினேகா திரவ்பதியாகவும் நடித்துள்ள குருஷேத்திரா என்ற கன்னட திரைப்படத்தின் டீசர் தற்போது, வெளியாகி உள்ளது.
மகாபாரத புராணத்தை அடிப்படையாக கொண்ட மெகா பட்ஜெட் படம் இது. துரியோதணனை கதாநாயகனாக காட்டும் இந்த படத்தில் தர்ஷன் அந்த பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அர்ஜுன் கர்ணனாகவும், சினேகா திரவ்பதியாகவும், வி.ரவிச்சந்திரன் கிருஷ்ணராகவும், அம்பரீஷ் பீஷ்மராகவும், சோனு சூட் அர்ஜுனனாகவும் நடித்துள்ளனர்.
இவர்கள் தவிர, நிகில் குமார், பி.ரவி ஷங்கர், ஹரிப்ரியபா, பாரதி விஷ்ணுவர்தன், மேக்னா ராஜ், பிரக்யா ஜெய்ஸ்வால், ரம்யா நம்பீசன், அனசுயா பரத்வாஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பிரபல கன்னட இயக்குநர் நாகன்னா இயக்கியிருக்கும் இந்த படம் கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.
தற்போது, மீண்டும் பழைய உத்வேகத்துடன் படங்களில் நடிக்க தயாராகி விட்ட சினேகா தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துகொள்ள தினமும் கடுமையான உடற்பயிற்சி மற்றும் சரிவிகித உணவு முறைகளை பின்பற்றி வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில், உடற்பயிற்சி கூடத்தில் வியர்வை சொட்ட உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள்.. உங்களுக்கு இன்னும் வயசாகல மேடம் என்று படையப்பா படத்தின் அப்பாஸ் கணக்காக வியப்பில் ஆழ்ந்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ,
Tags
Actress Sneha