கனவு இல்ல நெசமாத்தான் பா..! - எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ் தேதி வந்துடுச்சி - இதோ ட்ரெய்லர்..!


இயக்குனர் கெளதம் மேனன் - தனுஷ் கூட்டணி மற்றும் பாடல்களால் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படம், ரிலீஸ் தேதி தள்ளி போய், தள்ளி போய் ரசிகர்களை வெறுப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது. 

நான் காலேஜ் படிக்கும் போது ஆரம்பிச்ச படம், இப்போ எனக்கு திருமணம் ஆகி குழந்தையும் ஸ்கூலுக்கு போய்விட்டது இன்னும் படம் ரிலீஸ் ஆகவில்லை என்று ரசிகர்கள் கிண்டலடிதார்கள். ஒருவழியாக வரும் செப்டம்பர் 6 அன்று வெளியாகவுள்ளது. 


இத்தகவல் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டு, கூடவே டிரெய்லரும் வெளியாகியுள்ளது. கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் - எனை நோக்கி பாயும் தோட்டா. 


இசை - தர்புகா சிவா. இதன் படப்பிடிப்பு 2016-ல் தொடங்கி, செப்டம்பர் 2018-ல் முடிந்தது. தணிக்கையில் இந்தப் படம் யு/ஏ பெற்றுள்ளது. 

இதோ படத்தின் ட்ரெய்லர்..