தன்னுடைய அடுத்த படத்திற்காக உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் காட்சியளிக்கும் நடிகர் அஜித் புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அஜித்தின் அடுத்த படத்தையும் "நேர்கொண்ட பார்வை" படத்தின் இயக்குனர் எச்.வினோத் தான் இயக்குகிறார். இந்த படத்தில் அஜித் பைக் ரேஸராக நடிக்கிறார்.
இதற்காக அவர் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டது. இதனை உறுதிபடுத்தும் வகையில், அஜித் மெலிந்த தோற்றத்தில் காட்சியளிக்கும் புகைப்படம் சமீபத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.
Tags
Ajithkumar