அட்லி – விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள பிகில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். அவருடன் கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஏஜிஎஸ் சார்பில் கல்பாத்தி அகோரம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைக்க, ரூபன் எடிட் செய்ய, விஷ்னு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
விஜய் இப்படத்தில் அப்பா, மகன் என்று இரு வேடங்களில் நடித்துள்ளார். மகன் விஜய் பெண்கள் கால்பந்து விளையாட்டு கோச்சாகவும், அப்பா விஜய் மீன் வியாபராம் செய்யும் லோக்கல் தாதா-வாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.
தீபாவளிக்கு இப்படம் வெளிவரும் என்று பிகில் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், விஜய் பாடியிருக்கும் ‘வெறித்தனம்’ பாடல் அதிகாரப்பூர்வமாக நேற்று மாலை 6 மணிக்கு பிரீமியர் முறையில் வெளியிடப்பட்டது.
இதனை தொடர்ந்து, 12 மணி நேரத்தில் 4M பார்வைகள் 650K+லைக்குகள் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது இந்த பாடல்.