20 வருடத்திற்கு முன்னாள் நடிகர் சூரி எப்படி இருந்துள்ளார் பாருங்க - ப்ப்பா - நம்பவே முடியாது - இதோ வீடியோ


சினிமா உலகில் ஒரு அறிமுகம் கிடைத்து விடாதா..? எப்படியாவது குடும்பத்தை காப்பாற்றி விட மாட்டோமா..? என அலைந்து திரியும் நடிகர்கள், இயக்குனர்கள் எண்ணிக்கை அதிகம். 

இது இப்போது அல்ல, எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்தில் இருந்தே சினிமாவில் நுழைய நாயாய், பேயாய் அழைந்து கொண்டிருப்பவர்கள் ஏராளம். ஆனால், சிலருக்கு மட்டுமே சினிமா என கனவுலகம் வாய்ப்பு கொடுக்கும். மற்றவர்கள் முயற்சி செய்து முயற்சி செய்து மூட்டை கட்டிக்கொண்டு ஊரை பாக்க போக வேண்டியது தான். 

கொடுமை என்னவென்றால், அப்பா, அம்மா, உறவினர்கள் என உதவியுடன் எளிமையாக சினிமாவில் நுழைந்து விட்டு திறமையே இல்லாத பலரும் நானும் நடிகன், நானும் நடிகை என்று சொல்லிக்கொண்டு சினிமா எடுக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் நடத்தும் அட்டகாசங்களை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். 

சிலர், அப்படியான வாழ்க்கை கிடைத்தும் பணிவின்மை, எகத்தாளம், போதை பழக்கம் என நிலை தடுமாறி குழியில் விழும் சம்பவங்களும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால், போராடி சினிமாவிற்குள் நுழைந்த இயக்குனர்கள், நடிகர்களின் படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறுகின்றன. 

எத்தனையோ புதிய இயக்குனர்கள் நல்ல நல்ல படங்களை கொடுகிறார்கள். சிறு பட்ஜெட்டில் கூட படத்தை எடுத்து ஹிட் ஆக்குகிறார்கள். அதே நேரம், 100 கோடி, 150 கோடி பட்ஜெட் போட்டும் போட்ட பணத்தை எடுத்துவிடமாட்டோமா..? என்று வசூலை எண்ணிக்கொண்டிருக்கும் இயக்குனர்களும் இருக்கவே செய்கிறார்கள். 

அந்த வகையில், நீண்ட கால போராட்டத்துக்கு பின்னர் சினிமாவிற்குள் நுழைந்து கலக்கிகொண்டிருப்பவர் நடிகர் சூரி. ஆங்கில வார்த்தைகளை வித்தியாசமாக உச்சரிப்பது எல்லாம் காமெடியா..? என்று சில கிண்டல் கேலிகளும் இவரை சுற்றி வந்து கொண்டு தான் இருக்கின்றன. 

இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் கவுண்டமணியுடன் ஒரு சிறிய ஃபிரேமில் தோன்றியுள்ளார் நடிகர் சூரி. இந்த சிறிய ஃபிரேமில் நடிக்க கவுண்டமணி ஏற்கனவே தனக்கு தெரிந்த ஒரு ஆளை கமிட் செய்து வைத்திருந்துள்ளார். ஆனால், இயக்குனரின் உதவியுடன் நடிகர் சூரி அந்த வாய்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த காட்சி,