தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் சேரன். சமீப காலமாக தனது மகளின் காதல் பிரச்சனை காரணமாக மனமுடைந்து போனார். தொடர்ந்து ஒரு சிறு சறுக்கல்.
ஆனால், சமீபத்தில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் சேரன், 91 நாட்கள் தாக்கு பிடித்து பிறகு வெளியேறினார். அதையடுத்து தனது டுவிட்டரில், ‛‛தலைவணங்கி நிற்கிறேன்.
91 நாட்களாக எனது பிக்பாஸ் பணத்தை சரியாக புரிந்து கொண்டு என்னை தாலாட்டி தட்டிக் கொடுத்து என் அன்பின் பக்கம் நின்ற அனைத்து நல்ல இதயங்களுக்கும் நன்றி.
நேர்மை, நற்பண்பு, உண்மையின் பக்கம் நிற்கும் நீங்களே தலைசிறந்த மனிதர்கள். மீண்டும் என்னை உங்களில் ஒருவரான ஏற்றதில் மகிழ்ச்சி'' என பதிவிட்டிருந்தார்.
சேரனின் இந்த பதிவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. சேரன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியபோது, பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த அனுபவமே உங்களுக்கு இன்னொரு ஆட்டோகிராப்பிற்கான கதையை கொடுத்திருக்கும் என்று நினைக்கிறேன்.
அதனால், இந்த அனுபவத்தை வைத்து ஆட்டோகிராப் 2 படத்திற்கான கதையை ரெடி பண்ணுங்கள் என்றார் கமல். அதற்கு சேரனும், கண்டிப்பாக ஆட்டோகிராப் 2 விற்கான பல விசயங்கள் எனக்கு கிடைத்துள்ளது.
அதற்கான முயற்சிகளில் இறங்குவேன் என்று அதிரடியாக சொல்லிவிட்டு விடைபெற்றார். சேரனின் இந்த பதிலால் விரைவில் ஆட்டோகிராப் 2 உருவாகலாம் என தெரிகிறது.