தமிழில் உன்னை தேடி என்ற திரைப்படம் மூலம் 1999 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா.
அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் கதாநாயகியாகவும், துணை நடிகையாகவும் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான வெற்றிக்கொடி கட்டு, சந்திரமுகி போன்ற படங்கள் மாபெரும் வெற்றிபெற்றது.
சித்திரம் பேசுதடி படத்தில் இவர் நடனமாடிய வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் பாடல் இன்று வரை மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.
இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பயனற்ற பிசியாக இருந்த மாளவிகா 2009 ஆம் ஆண்டு வெளியான ஆறுபடை படத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்டு திருமண வாழ்க்கையில் பிஸியாகிவிட்டார்.
தொடர்ந்து, சினிமா வாய்ப்புகள் சில வந்தும் நடிக்க மறுத்துவிட்டார். பொதுவாக நடிகைகள் என்றாலே திருமணத்திற்கு பிறகு உடல் எடை கூடி குண்டாகி விடுவார்கள். ஆனால், மாளவிகா திருமணம் ஆகும் போது எப்படி இருந்தாரோ அப்படியே தான் குழந்த்கைகள் பிறந்த பிறகும், தற்போதும் இருக்கிறார்.
இதற்கு என்ன காரணம், எப்படி தன்னுடைய 41-வயதிலும் இப்படி ஃபிட்டாக இருக்கிறீர்கள் என்று பலரும் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேட்பதை பார்த்திருக்கிறோம். அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக தான் யோகா செய்யும் சில புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார் மாளவிகா. இதனை பார்த்த ரசிகர்கள் 41 வயதிலும் இப்படியா..? என வியந்து தான் வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படங்கள்,