தளபதி 64-ல் இவங்க மட்டும் ஹீரோயின் ஆகட்டும் - அப்புறம் இருக்கு கச்சேரி..! - இது அஜித் ரசிகர்களின் "வெறித்தனம்"..!


நடிகர் விஜய் மற்றும் அஜித்குமார் ஆகியோரின் ரசிகர்களுக்கிடையே அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் யார் என்கிற சர்ச்சை நீண்டகாலமாகவே நடந்து கொண்டிருக்கிறது. 

இந்நிலையில், சமீபத்தில் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று அவரது தாயார் ஷோபா சந்திரசேகரன் ஒரு செய்தி வெளியிட்டிருந்தார். இதனால் அஜீத்தின் ரசிகர்கள் கொதித்துப்போனாறார்கள். 


நேற்று கூட, சூப்பர் ஸ்டார் என்றதையும் தாண்டி #மக்கள்திலகம்அஜித் என ட்ரென்ட் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் அஜித் ரசிகர்கள். தொடர்ந்து, விஜய் ரசிகர்கள் #அன்புள்ளரஜினிவிஜய் என்ற டேக்கை ட்ரென்ட் செய்து பதிலடி கொடுத்தனர்.


மேலும், எங்கள் "தல" தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றும் குரல் கொடுத்தும் வருகிறார்கள். இந்த நேரத்தில் பிகில் படத்தை அடுத்து விஜய்யின் 64வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அந்த படத்தில் நாயகியாக கியாரா அத்வானி நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

அதனால் இந்த கியாரா அத்வானியை வைத்தே சர்ச்சையை ஆரம்பிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் அஜீத் ரசிகர்கள். அதாவது இந்த கியாரா அத்வானி ஒரு வெப்சீரிஸில் சுயஇன்பம் செய்யும் பெண்ணாக நடித்திருந்தார். 

அதனால் இந்த நடிகை தான் விஜய் படத்தின் நாயகி என்பதை படக்குழு உறுதி செய்ததும், அவரை வைத்தே சர்ச்சைகளை தொடங்கி விடவேண்டியதான் என்று காத்துக் கொண்டிருக்கிறார்களாம். ஆக, விஜய்யின் அடுத்த படம் சர்ச்சைக்கு பஞ்சமில்லாத படமாக உருவாகும் என்று தெரிகிறது.
Previous Post Next Post
--Advertisement--