முதல்வர் நாற்காலியில் அமரப்போவது இவர்தான்! அடித்து சொல்லும் சாமியார்!
சென்னை, ஏப்ரல் 25 : 2026 சட்டமன்றத் தேர்தலில் யார் முதலமைச்சர் பதவிக்கு வருவார் என்பது குறித்து பிரபல ஜோதிடர் ஜோதிடர் திலகம் குருவருள் வெங்கடரமண சுவாமிகள் எளிய ஜாதக அமைப்பின் அடிப்படையில் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, நடிகர் விஜய் ஆகிய மூவரின் ராசியை மட்டும் வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த கணிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோதிடர் வெங்கடரமண சுவாமிகள் தனது கணிப்பில் கூறியிருப்பதாவது: “முதலமைச்சர் பதவிக்கு வாய்ப்புள்ள மூன்று பேரும் – மு.க.ஸ்டாலின் (சிம்ம ராசி), எடப்பாடி பழனிசாமி (கன்னி ராசி), நடிகர் விஜய் (கடக ராசி) – ஆகியோரின் ராசியை மட்டுமே பார்த்தால் போதும். 12-ம் வீடு விரயத்தையும், 11-ம் வீடு லாபத்தையும் தரும் என்ற அடிப்படை விதியைப் பயன்படுத்தினால் போதும். எடப்பாடி பழனிசாமியின் கன்னி ராசிக்கு மு.க.ஸ்டாலினின் சிம்ம ராசி 12-ம் வீடு (விரயம்) ஆகவும், நடிகர் விஜயின் கடக ராசி 11-ம் வீடு (லாபம்) ஆகவும் அமைகிறது. மு.க.ஸ்டாலினின் சிம்ம ராசிக்கு விஜயின் கடக ராசி 12-ம் வீடு (விரயம்) ஆக அமைகிறது. மேலும், சிம்ம ராசியும் கடக ராசியும் தற...