நடிகை மீரா மிதுன் சமீபகாலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். மோசடி செய்ததாகக் கூறி அவருக்கு வழங்கப்பட்ட மிஸ் சவுத் இந்தியா பட்டம் பறிக்கப்பட்டது.
மீரா மிதுன் மீது ஜோ மைக்கேல் தான் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இதுதொடர்பாக போலீசிலும் அவர் புகார் கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மீரா மிதுன், தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளித்தார். ஜோ மைக்கேல் மீது இருந்த கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு தன்னுடைய மேலாளரிடம் தான் கூறிய வார்த்தைகளை வைத்து தனக்கு எதிராக சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இப்படியாக, தன்னை பற்றிய குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் பரவிக்கொண்டிருக்கும் அதே நேரம் கூடவே தனது கவர்ச்சி புகைப்படங்களையும் பதிவிட்டு பரவ விட்டு வருகிறார் நடிகை மீரா மிதுன்.
இந்நிலையில், செப்டம்பர்-ஐ ரிமெம்பர் ஆக்குங்கள்.! என்று கூறி படு சூடான கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வழக்கம் போல கழுவி ஊத்தி வருகிறார்கள்.