தமிழ் சினிமாவில் வளரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை நிக்கி கல்ராணி. தற்போது இவர் ராஜவம்சம் என்ற ஒரே ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.
டார்லிங், யாகாவாராயினும் நா காக்க உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். சிந்தி சமூகத்தைச் சார்ந்த இவர் பெங்களூருவில் வசித்து வருகிறார்.
ஓர் காதல் செய்வீர் திரைப்படத்தில் நடித்த நடிகை சஞ்சனா கல்ரானி இவரது மூத்த சகோதரியாவார். தமிழில் வாய்ப்புகள் இல்லாத நிலையில், மலையாளத்தில் இதிஹாசா 2 மற்றும் தமாக்கா என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தமாக்கா படப்படிப்பு தளத்தில் தன்னுடன் பணிபுரியும் நடிகரான சூரஜ் திலகாத் என்பவரை கை குழந்தை போல தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி.
இதனை பார்த்த நெட்டிசன்கள் இப்படியெல்லாம் போட்டோ போட்டா எங்களுக்கு எரியுமா..? எரியாதா..? என்று சர்கார் பட ராதாரவி கணக்காக கேட்டு வருகிறார்கள்.
Tags
Nikki Galrani