திருநெல்வேலிச் சீமையில் 1993 ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி அவதரித்தவர் ரம்யா பாண்டியன். இன்னும் மணமாகவில்லை. தமிழில் ‘டம்மி டப்பாஸு’என்ற டம்மியான படத்தின் மூலம் 2015ல் அறிமுகமானார்.
ஆனால் நல்ல அடையாளம் கொடுத்த படம் ராஜூ முருகனின் ‘ஜோக்கர்’. அந்த அடையாளத்தை அழித்து ஒழித்த பெருமை சமுத்திரக்கனியுடன் அவர் நடித்த ‘ஆண் தேவதை’படத்தையே சேரும்.
ஏனெனில் அப்படத்தில் ஒரு நெகடிவ்வான ரோல் பண்ணியிருந்தார் ரம்யா. ஆள் எங்கு இருக்கிறார்..? என்ன செய்கிறார்..? என்று தெரியாமல் இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் வெளியிட்ட இடுப்பு மடிப்பு புகைப்படம் இணையத்தில் வைரலாகி இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது.
அதிலும் குறிப்பாக தமிழ் இலக்கியவாதிகள் அப்படத்தைப் பார்த்து நீண்ட நெடிய பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் எழுதும் கவிதைகளிலிருந்தும் கமெண்டுகளிலிருந்தும் காணமுடிந்தது.
இந்நிலையில், இடுப்பு கவர்ச்சியில் இருந்து முதுகு கவர்ச்சிக்கு தாவியுள்ளார் ரம்யா. முதுகின் அழகை வெளிச்சம் போடும் வண்ணம் சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்து. கவிஞர்களின் மூளையை உசுப்பி விட்டுள்ளார் அம்மணி.
ஜோக்கர், ஆண்தேவதை உள்ளிட்ட படங்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து நல்ல பெயர் வாங்கியவர் ரம்யா பாண்டியன். ஆனால் நல்ல நடிகை எனும் பெயர் அவருக்கும் புதிய பட வாய்ப்புகளை பெற்றுத்தரவில்லை.
இதன் காரணமாகவே அவர் அண்மை காலமாக கவர்ச்சி போட்டோ ஷூட்களில் கவனம் செலுத்தி வருகிறார். படத்தில் நடித்து கிடைக்காத பப்ளிசிட்டியை, இந்த புகைப்படங்கள் அவருக்கு பெற்றுத் தந்திருக்கின்றன என்பதே உண்மை.





