எல்லாமே சுத்துதே...!. - சீரியல் நடிகை ஆல்யா மானசா வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் கருத்து


பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல் ராஜா ராணி. இதில் ஹீரோ, ஹீரோயினாக நடித்து பிரபலமானவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா. 

இவர்களில் நடன நிகழ்ச்சி மூலம் ஏற்கனவே மக்களிடம் அறிமுகமானவர் ஆல்யா. ஆனால், ராஜாராணி சீரியல் அவரை ரசிகர்களின் குடும்பங்களில் ஒருவராக மாற்றியது.சீரியலில் இருவரும் செம்பா, கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் கணவன், மனைவியாக சேர்ந்து நடித்திருந்தனர். 

அவர்களது கெமிஸ்டரி மக்களிடம் அதிகம் ரசிக்கப்பட்டது.இதனால் நிஜத்திலும் அவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் பரிசுகள் கொடுத்துக்கொள்வது, மணிக்கணக்கில் பேசுவது என காதலை வளர்த்தனர். 

இந்த நடவடிக்கைகளை எல்லாம் தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர். இதனால் சீரியலிலும் அவர்களது நடிப்பு இன்னும் இயல்பாக அமைந்தது.இந்நிலையில் ஆல்யா மானசா - சஞ்சீவ் ரகசிய திருமணம் செய்து கொண்டது தற்போது தெரியவந்துள்ளது. 

திருமணம் முடிந்த கையோடு உள்நாடு, வெளிநாடு என பல இடங்களுக்கு சுற்றுலா சென்று வருகிறது இந்த ஸ்டார் ஜோடி. இந்நிலையில், ஆல்யா மானசா லெஹங்கா எனப்படும் உடையில் ஸ்லோ மோஷனில் சுற்றும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் எல்லாமே சுத்துதே என்று கல கல கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.