நடிகை ஸ்ருதிஹாசனும் பிரிட்டீஸ் நாடக நடிகர் மைக்கேல் கோர்சேல் என்பவரை காதலித்து வந்தார்.இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன், லண்டனில் இருந்து மும்பை வந்த மைக்கேலை ஸ்ருதிஹாசன் வரவேற்று காரில் அழைத்துச் சென்றார். இருவரும் கட்டியணைத்து அன்பை பரிமாறிக்கொண்ட காட்சியை மும்பை மீடியா படம் பிடித்து வெளியிட்டது.
இதுபற்றி மும்பை சினிமா வட்டாரத்தில், ‘மைக்கேல் கோர்சேல் சோழ நாட்களாக இங்குதான் இருக்கிறார். இருவரும் கமலை ஏற்கனவே சந்தித்து திருமணம் பற்றி பேசிவிட்டனர்’ என்று கூறினார்கள்.
ஆனால், அடுத்த சில மாதங்களில் இருவரும் பிரிந்து விட்டனர் என்ற தகவல் வெளியான நிலையில், நடிகை ஸ்ருதிஹாசன் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் அம்மணி.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக மோசமான கவர்ச்சி உடையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் திட்டு வாங்கி வருகிறார்.