இயக்குனர் கௌவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், நடிகர் தனுஷ், நடிகை மேகா ஆகாஷ், சசிகுமார் மற்றும் பலர் நடித்த 'எனை நோக்கி பாயும் தோட்டா' கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்கி 2016-தீபாவளிக்கு வெளியாகும் என கூறினார்கள்.
2016, 2017, 2018 தீபாவளிகள் சென்று இப்போது 2019 தீபாவளியும் வரப்போகின்றது. ஆனால், படம் ரிலீஸ் ஆன பாடில்லை. இந்நிலையில், படத்திற்கான அனைத்து பிரச்சினைகளும் முடிந்து செப்டம்பர் 6-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள்.
ஆனால், எந்த வருடம் என்று கூறவில்லையே என்று ரசிகர்கள் கிண்டலடித்து வந்தனர்.இறுதியில், ரசிகர்கள் பலரும் கூறியது போலவே, கடைசி நேரத்தில் படத்தை வெளியிட முடியாத சிக்கல் ஏற்பட்டு படம் வெளியாகவில்லை. பொதுவாக ஒரு படம் ரிலீஸ் தள்ளிப்போனாலே படத்தின் மீதான நம்பிக்கை குறைந்துவிடும்.

ஆனால், எனை நோக்கி பாயும் தோட்டா தள்ளி தள்ளி தள்ளி போய்கொண்டிருகின்றது. கௌவுதம் மேனன், லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் புதிய படத்திற்கான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட லண்டன் சென்றுள்ளார்.
அங்கு முன்பணம் பெற்று, அதை வைத்து இங்குள்ள சில கடனை அடைத்து 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தை வெளியிடுவார் என்றார்கள். ஆனால், நேற்று செப்.,13-ம் தேதி படம் எப்படியும் வெளியாகிவிடும் என்று அப்போது சொன்னார்கள்.
ஆனால், லைகா உடனான பேச்சு வார்த்தை சுமூகமாக முடியவில்லை எனத் தெரிகிறது. அதனால், கௌவுதம் மேனன் எந்த முன்பணத்தையும் பெறவில்லை. எனவே தான் படம் இன்று வெளியாகவில்லை. இதனிடையே, அக்டோபர் 4-ம் தேதி தனுஷ் நடித்துள்ள 'அசுரன்' வெளியாக உள்ளது.
அதற்கு முன்னதாக 'எனை நோக்கி பாயும் தோட்டா' வெளியாக வாய்ப்பில்லை. ஏனென்றால் அடுத்தவாரம் சூர்யாவின் காப்பான் ரிலீஸாகிறது. அதற்கு பெரும் தியேட்டர்கள் கிடைக்கும் என்பதால் எனை நோக்கி பாயும் தோட்டா நவம்பர், டிசம்பருக்கு தள்ளிப் போகும் நிலை உருவாகியுள்ளது.
எனை நோக்கி பாயும் தோட்டா - பாயுமா பாயாதா..?