தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித்குமார். உலகம் முழுதும் இவருக்கு ரசிகர் பட்டாளம் உள்ளது. சினிமாவில் நடிப்பதை தவிர பெரிதாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டார்.
பொதுமக்களை தாண்டி பல சினிமா பிரபலங்களும் இவருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். இவருடன் ஜோடியாக நடிக்க பல நடிகைகள் வெயிட்டிங்.
அந்த வகையில், நடிகை ராஷ்மிகா மந்தன்னா சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட போது நீங்கள் எந்த ஹீரோவுடன் சேர்ந்து நடிக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது, அவர் ரஜினி சாருடன் நடிக்க வேண்டும் என்று ஆசை உள்ளது.மேலும், அஜித் சாருடனும் நடிக்க ஆசை உள்ளது என்று கூறினார். இதனை கேட்ட ரசிகர்கள் பலரும் அரங்கை அதிர வைக்கும் அளவுக்கு கூச்சலிட்டனர்.
இதனை பார்த்து ஷாக் ஆன அவர் ஏன் இப்படி கத்துகிறார்கள் என்று தொகுப்பளினியிடம் கேட்க " அவர் பேரை சொன்னாலே கத்துவாங்க" என்று கூறினார் தொகுப்பாளினி. இதனை கேட்ட ராஷ்மிகா ஓ..ஓ.! என்று கூறினார். இதோ அந்த வீடியோ,