தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பிறகு வாய்ப்புகள் இல்லாததால் மாடலிங்கில் கவனம் செலுத்தினார்.
அதில் இவரது ஒரு விளம்பரத்தைப் பார்த்த இந்தி இயக்குனர் இவரை ஹிரித்திக் ரோஷன் ஜோடியாக ஒரு இந்தி படத்தில் நடிக்க வைத்தார். அந்த படம் சரியாக போகவில்லை என்றாலும் டோலிவுட்டில் இருந்து இவருக்கு வாய்ப்புகள் வந்தது.
அந்தவகையில் தெலுங்கு, ஹிந்தியில் பிசியாகி விட்ட அவர், தெலுங்கு சினிமாவில் மகேஷ்பாபு, அல்லுஅர்ஜூன், ஜூனியர் என்டிஆர், ராம்சரண் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
இதுபோக இன்ஸ்டாகிராமில் 6.9 மில்லியன் ரசிகர்களை ஃபாலோயர்ஸ்களாக கொண்டுள்ள பூஜா அவ்வப்போது தனது கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை சூடேத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், "யாருக்காவது சாக்லேட் வேணுமா..? " என கேட்டு கண்ணை கவரும் உடையில் படு சூடான கவர்ச்சி பார்வையை வீசி இளசுகளின் இதயதுடிப்பை எகிற வைத்துள்ளார் அம்மணி. லைக்குகளை குவித்து வரும் அந்த புகைப்படங்கள் இதோ,