இயக்குனர் அட்லி தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார். கதையை திருடுகிறார், பழைய படங்களை பட்டி டிங்கரிங் பார்கிறார் என்று இவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளும் உள்ளன.
ஆனால், அவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் வெற்றிப்படங்களாகவே உள்ளன. ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை தொடர்ந்து இப்போது நடிகர் விஜய்யுடன் மூன்றாவது முறையாக இணைந்து "பிகில்" என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
இந்த பிகில் படத்தின் மீதும் கதை திருட்டு சர்ச்சை ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருகின்றது. இந்நிலையில், அட்லி இயகவுள்ள அடுத்த படத்தின் ஹீரோ யார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆம், சூப்பர் ஸ்டார் ரஜினி தான் அட்லி இயக்கவுள்ள அடுத்த படத்தின் ஹீரோ. இந்த படம் ரஜினி ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும் வகையில் இருக்கும் என்றும் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் இளமையாக இந்த படத்தின் ரஜினி தோன்றுவார் என்றும் கூறுகிறார்கள்.
இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்கப்படுகிறது.




