2016-17 களில் கலக்கிய டப்ஸ் மாஷ் ஆப் மூலம் சமூக வலைதளங்களில் பிரபலமானவர் மிருணாளினி ரவி. டப்ஸ்மாஸ் பிரபலமாகி மியூசிக்கல்லி , டிக்டாக் என பிரமாண்ட வளர்ச்சி பெற்றுள்ளது.
இந்த செயளி மூலம் பலரும் பிரபலமாகி வருகிறார்கள். அதில் ஒருவர் தான் மிருணாளினி ரவி. இவருக்கு சொல்லிக்கொள்ளும் படி பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. பலரும் இவரை பின் தொடர்ந்து வருகிறார்கள்.
இயக்குனர் சுரேஷ் இயக்கத்தில் நகல் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தற்போது,முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இயக்குனர் பொன்ராம் இயக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைதுள்ளது.
இப்படத்தின் ஷூட்டிங் வரும் 25 ம் தேதி தேனி மாவட்டத்தில் எடுக்கப்படுகிறதாம். மேலும் மிருணாளினி ஜிகர்தண்டா படத்தின் தெலுங்கு ரீமேக்கான வால்மீகி படத்தில் இவர் தான் ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags
Mirnalini Ravi