வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2013ல் வெளியான நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படமாகும். இதை இயக்குனர் பொன்ராம் இயக்கினார். இதில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சத்யராஜ் மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் எதார்த்தமான நகைச்சுவை காட்சிகள் படத்தில் சூப்பர் ஹிட் ரேஞ்சுக்கு கொண்டு சென்றது. இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் - சூரி காம்போ பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்த படத்தின் ஸ்ரீதிவ்யாவின் தோழியாகவும், நடிகர் சூரியின் காதலியாகவும் தோன்றியவர் நடிகை ஷாலு ஷம்மு.
இந்நிலையில், பிரபல தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வந்த நடிகர் சூரியை நடிகை ஷாலு ஷம்மு சந்தித்துள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஆறு வருடங்களுக்கு பிறகு தனது காதலியை மீண்டும் சந்தித்துள்ளார் சூரி என என ரசிகர்கள் நகைச்சுவையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.