சூர்யாவை காப்பாற்றியதா காப்பான் - வசூல் எவ்வளவு..?


நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கிய காப்பான் திரைப்படம், நேற்று உலகம் முழுவதும் வெளிவந்தது. 


கடந்த பத்து வருடங்களாக ஒரு ஹிட் படத்திற்கு காத்திருக்கும் சூர்யாவை காப்பான் காப்பாற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,  இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. 

இருந்தாலும், நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு இந்த படம் நீண்ட வருடங்களுக்கு பின் பிடித்த படமாக தான் அமைந்துள்ளது என்பதும் மறுக்க முடியாது. அதிலும் குறிப்பாக கேரளாவில் மிக குறைந்த திரையரங்குகளில் தான் வெளி வந்தது. 


அப்படியிருந்தும், இப்படத்திற்கு, கேரளாவில் மட்டும் சுமார் 1.2 கோடி ரூபாய் வரை முதல் நாள் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. சமீபத்தில் வெளியான சூர்யாவின் என்.ஜி.கே., அங்கு வெறும் 46 லட்ச ரூபாய் தான் முதல் நாள் வசூல் செய்தது.

ஆனால், இந்த படம் அதை விட மூன்று மடங்கு வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.