Posts

Showing posts with the label Kappan Movie

சூர்யாவை காப்பாற்றியதா காப்பான் - வசூல் எவ்வளவு..?

Image
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கிய காப்பான் திரைப்படம், நேற்று உலகம் முழுவதும் வெளிவந்தது.  கடந்த பத்து வருடங்களாக ஒரு ஹிட் படத்திற்கு காத்திருக்கும் சூர்யாவை காப்பான் காப்பாற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,  இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.  இருந்தாலும், நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு இந்த படம் நீண்ட வருடங்களுக்கு பின் பிடித்த படமாக தான் அமைந்துள்ளது என்பதும் மறுக்க முடியாது. அதிலும் குறிப்பாக கேரளாவில் மிக குறைந்த திரையரங்குகளில் தான் வெளி வந்தது.  அப்படியிருந்தும், இப்படத்திற்கு, கேரளாவில் மட்டும் சுமார் 1.2 கோடி ரூபாய் வரை முதல் நாள் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. சமீபத்தில் வெளியான சூர்யாவின் என்.ஜி.கே., அங்கு வெறும் 46 லட்ச ரூபாய் தான் முதல் நாள் வசூல் செய்தது. ஆனால், இந்த படம் அதை விட மூன்று மடங்கு வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

என்னது..! காப்பான் படம் இன்னிக்கு ரிலீஸ் ஆகிடுச்சா..? - பிகில் படத்தால் காப்பாற்ற முடியாத நிலையில் காப்பான்..!

Image
சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் உருவாகி இன்று உலகம் முழுதும் வெளியாகியுள்ள திரைப்படம் காப்பான். படம் குறித்து ஆஹா.. ஓஹோ என்ற கருத்து இதுவரை யார் வாயில் இருந்தும் வரவில்லை.  பெரிய நடிகர்கள் படங்களின் முக்கியமான டார்கெட்டே வெள்ளி,சனி,ஞாயிறு என முதல் மூன்று நாட்கள் தான். ஆனால், லட்டு மாதிரி மூன்று நாட்கள் காப்பான் படக்குழுவின் கைக்கு கிடைத்தும் வாய்க்கு எட்டாத நிலைதான் இன்று.  பெரும்பாலான அரங்குகள் காத்து வாங்கிக்கொண்டிருகின்றன. படத்தை பற்றிய விமர்சனமும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. அயன் படத்திற்கு பிறகு சூர்யாவிற்கு சொல்லிக்கொள்ளும்படி ஒரு மெஹா ஹிட் படம் அமையவே இல்லை.  இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள காப்பான் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தரை தட்டி நின்றதற்கு முக்கியமான காரணமாக, பிகில் இசை வெளியீட்டு விழாவை சுட்டி காட்டுகிறார்கள் கோடம்பாக்கத்தினர்.  நேற்று, முழுதும் அஜித், விஜய் ரசிகர்கள் பிகில் ஆடியோ வெளியீடு பற்றிதான் பேசிக்கொண்டிருந்தனர். இதனால், காப்பான் படத்தின் ப்ரோமோஷன் பெரிய அளவில் அடி வாங்கியுள்ளது என்பது தான் உண்மை.  நட...

"காப்பான்" திரைப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது ஒரு டாப் ஹீரோவா..? - யார் அவர்..?!

Image
அயன், மாற்றான் படங்களை அடுத்து சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் உருவாகியுள்ள படம் காப்பான்.இந்த திரைப்படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா சைகல், பொமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இந்தப் படத்தில் நடிகர் மோகன்லால் இந்திய பிரதமராகவும், அவருக்கு பாதுகாப்பளிக்கும் உயர் அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர்.காப்பான் திரைப்படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் வெளியாகியுள்ள நிலையில் செப்டம்பர் 20-ம் தேதி படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி படம் 165 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 45 நிமிடங்களாகும். மேலும் படத்துக்கு தணிக்கைக் குழு UA சான்றிதழ் அளித்துள்ளனர்.  வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகும் இந்த படத்திற்கான புரோமோஷன் நிகழ்சிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா ஒரு மேடையில் பேசும் போது, காப்பான் கதை எனக்காக எழுதபட்ட கதை அல்ல.  கடந்த 2012-ம் ஆண்டு ஒரு டாப் ஹீரோவுக்காக எழுதப்பட்ட கதை. பல்வேறு காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போகவே இந்த வாய்...

பிரமாண்ட படம் ரிலீஸ் - ஓடி ஒழிந்த "காப்பான்"..! - ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு - ரசிகர்கள் ஏமாற்றம்..!

Image
நடிகர் சூர்யாவிற்கு கடந்த 2010-ம் ஆண்டு வெளியான சிங்கம் திரைப்படம் ஒரு ப்ளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது. அதன் பிறகு, சொல்லிக்கொள்ளும்படி ஹிட் படங்கள் அமையவில்லை.  வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்கள் மற்றும் சில படங்களில் கெஸ்ட் ரோல் என நடித்து தன்னுடைய நிலையில் இருந்து உயராமல் போனாலும் இறங்கி வராமல் பார்த்துக்கொண்டிருக்கிறார் நடிகர் சூர்யா.  அதிலும், இடையில் வெளியான அஞ்சான் திரைப்படம். சூர்யாவின் சினிமா அஸ்திவாரத்தையே ஆட்டிப்பார்த்தது. இந்நிலையில், இயக்குனர் கே.வி.ஆனந்த் - சூர்யா கூட்டணியில் 'அயன், மாற்றான்' ஆகிய படங்களுக்குப் பிறகு உருவாகியுள்ள 'காப்பான்' படத்தை, ஆகஸ்ட் 30ம் தேதியன்று வெளியிடப் போகிறோம் என எப்போதோ அறிவித்துவிட்டார்கள்.  ஆனால், 'சாஹோ' படத்தின் வெளியீடு ஆகஸ்ட் 15லிருந்து 30க்கு தள்ளிப் போனதால் 'காப்பான்' படத்தை அந்த நேரத்தில் வெளியிட படக்குழு விரும்பவில்லை. இதனால் ரிலீசில் சிக்கல் உருவானது.  இப்படத்தையும் தென்னிந்திய அளவில் தமிழ், தெலுங்கு என பில்லிங்குவல் படமாக மிகப் பிரம்மாண்டமாக வெளியிட முடிவு செய்திருந...