அதனை தொடர்ந்து அவர் அங்காடி தெரு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பெரும் அளவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து அவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
மேலும் ஜெய்யுடன் இணைந்து அவர் நடித்த எங்கேயும் எப்போதும் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று அவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவானது.
கால ஓட்டத்தில் ஜெய்யும், நடிகை அஞ்சலியும் காதலிப்பதாக செய்திகள் வெளிவந்தன. இதற்கு சான்றாக இருவரும் ஒரே வீட்டில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகின.
ஆனால், யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை. இருவரும் பிரிந்து விட்டனர். நிலையில் அதற்கு இருவரும் மறுப்பு தெரிவித்து உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் ஹீரோயின் சப்ஜெக்ட் படமான லிசா மற்றும் நடிகர் விஜய் சேதுபதியின் "சிந்துபாத்" ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
ஆனால், இந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. தற்போது, கமிட் ஆகியுள்ள பெயரிடப்படாத புதிய படத்தில் காமெடி நடிகர் யோகி பாபுவுடன் ரொமான்ஸ் செய்யவுள்ளார் அஞ்சலி.
Tags
Actress Anjali