தடுமாறும் தமிழ் படங்கள் - ஆனாலும், அதிக விலைபோன பிகில் தெலுங்கு உரிமை - இது தான் காரணம்..!


தமிழில் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் தெலுங்கு டப்பிங் உரிமையாக அதிக விலைக்கு விற்கப்படுவது வழக்கம். 

இருப்பினும் கடந்த சில வருடங்களாக தமிழ்ப் படங்கள் தெலுங்கில் டப்பிங் ஆகி வெளியானாலும் அங்கு பெரிய வெற்றியைப் பெறாமல் தடுமாறி வருகின்றன. 


இந்நிலையில், நடிகர் விஜய், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் 'பிகில்' படத்தின் தெலுங்கு உரிமையை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் மகேஷ் கொனேரு வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


விஜய் நடித்து இதற்கு முன் வெளிவந்த 'மெர்சல்' படம் 5 கோடிக்கும், 'சர்கார்' படம் 7 கோடிக்கும் தெலுங்கு டப்பிங் உரிமை விற்கப்பட்டுள்ளது. அந்தப் படங்கள் பெரிய அளவில் வசூலிக்கவில்லை. இருப்பினும், பிகில் உரிமை 9 கோடி ரூபாய்க்கு விற்க்கப்ட்டுள்ளது என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

காரணம், 'பிகில்' திரைப்படம் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதால் இது வசூலித்து விடும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
Previous Post Next Post
--Advertisement--