கேடி படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை இலியானா. சிக்கென இருக்கும் ஒல்லியான இடுப்புக்கு சொந்தக்காரியான இவருக்கு தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
தொடர்ந்து தெலுங்கு பிசியாகிவிட்டார். ஆனால், தெலுங்கில் எல்லோரும் என்னுடைய இடுப்பை தான் பார்கிறார்கள். யாரும், என் நடிப்பை பார்க்கவில்லை என்று கூறி பாலிவுட்டிற்கு பறந்தார். பாலிவுட்டிற்கு சென்றதும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரூ நிபோன் என்பவரை காதலித்து வந்தார்.
ஒருகட்டத்தில் அவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக பாலிவுட்டில் செய்திகள் வெளியாகிவந்தன. இப்படியான நிலையில், 6 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் தெலுங்கு சினிமாவில் நடிக்க வந்த இலியானா, தற்போது சிரஞ்சீவியுடன் புதிய படத்திலும் நடிக்க கமிட்டகியிருக்கிறார்.
இந்த நேரத்தில் இலியானா தனது காதலரை பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகி வந்தன. அதை உறுதிப்படுத்தும்வகையில், தனது இன்ஸ்டாகிராமில் இருந்து ஆண்ட்ரூ நிபோனின் போட்டோக்களை டெலிட் செய்தார் இலியானா. அதையடுத்து இப்போது ஒரு பதிவு போட்டுள்ளார்.
அவர் கூறியதாவது, "வாழ்க்கையில் நீங்கள் குடும்பத்தினர் மற்றும் பார்ட்னரை இழக்கலாம். ஆனால் உங்களை மட்டும் இழந்து விடாதீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்கள் நேசிக்காதபோது உங்களை நீங்களே நேசித்துக்கொள்ள பழகிக்கொள்ளுங்கள்" என்று ஒரு பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து காதல் தோல்வியினால்தான் இலியானா இப்படி புலம்பித்தள்ளுகிறார். காதல், திருமணம், குழந்தை, பிரச்னைகள் மற்றும் அதற்க்கான தீர்வு என்பதே தீர்க்கமான வாழ்கையாக இருக்க முடியும்.
திருமண வாழ்கையில் பிரச்சனை இல்லாதாவர்கள் என்று யாரும் இல்லை. அதற்கான தீர்வை கண்டறிந்து அடுத்தடுத்து சென்று கொண்டே இருக்கவேண்டும். அதை விட்டுவிட்டு பிடித்திருக்கும் வரை சேர்ந்திருப்போம். பிடிக்காத போது பிரிந்து விடுவோம் என்று லிவ் இன் டு கெதர் வாழ்கை வாழ்பவர்களுக்கு இது தான் கதி. இதெல்லாம் வாழ்கையே இல்லை. என்று நெட்டிசன்கள் கமெண்ட் கொடுத்து சிரிப்பாய் சிரித்து வருகிறார்கள்.