பிரமாண்ட பட நடிகர்,நடிகைகளை துரத்தும் கெட்ட நேரம் - நடக்கிறது பரிகார பூஜை..!


கடந்த 2017-ம் ஆண்டு வெளியான அந்த பிரமாண்ட படத்தின் இரண்டாம் பாகம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்து இந்திய சினிமாவை உலக சினிமாக்கள் திரும்பி பார்க்கும் வகையில் இருந்தது.


ஆனால், அந்த படத்தில் நடித்த மூத்த நடிகர்கள் மூன்று பேர் இப்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருப்பதுடன் உடல் நலமும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல, அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஹீரோ மீண்டும் ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் நடித்து அந்த படம் அனைத்து மொழிகளிலும் பப்படமாகி விட்டது.மேலும், அந்த கதை திருட்டு கதை என்பதும் அம்பலாமாகி விட்டது.

அந்த படத்தில் வில்லனாக நடித்த நடிகரின் நிலைமை இன்னும் மோசம் உடல் மெலிந்து ஆளே உருக்குலைந்து போய் விட்டார்.  ஹீரோயின்கள் இருவருக்கும் இப்போது படத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 


முதல் ஹீரோயின் மிகவும் குண்டாகி உடல் எடையை குறைக்க சிகிச்சை பெற்று வருகிறார். இன்னொருவரோ வெறும் ஐட்டம் நம்பரில் மட்டும் ஆடி வருகிறார். இந்த படத்தில் நடித்த கெட்ட நேரம் தான் நம்மை துரத்துகிறதா..? அல்லது கண் திருஷ்டியாக இருக்குமா..? என சார்ந்த்த நடிகர்,நடிகைகள் கலந்து பேசி வருகிறார்களாம். 

இதற்காக, ஒரு பூஜை செய்தால் என்ன என்று ரம்யமான நடிகை ஒரு ஐடியாவும் கொடுத்திருக்கிறாராம்.