நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக கால தாமதமின்றி நடித்து கொடுக்க கூடிய திறமையான நடிகை. ஹீரோயினாக இருக்கட்டும். காக்கா முட்டை படத்தில் அம்மாவாக நடித்ததாக இருக்கட்டும். இவர் நடிப்பு கச்சிதமாக அந்த கதாபாத்திரங்களுக்கு பொருந்தும் வகையில் இருக்கும்.
சமீபத்தில், வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள "நம்ம வீட்டு பிள்ளை" படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்துள்ளார். இந்நிலையில், தனக்கு நடந்த கொடுமை குறித்தும், அதனால் இரண்டு நாட்கள் தூங்காமல் தவித்ததையும் பற்றி வாய் திறந்துள்ளார் அம்மணி.
ஆம், தமிழ் சினிமாவின் அதிகாரபூர்வமற்ற அடையாளமாக விளங்கும் பிரமாண்ட இயக்குனர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் பத்திரிக்கையாளார் வேடத்தில் நடிக்கவிருந்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
ஆனால், இந்தியன் 2 திரைப்படம் சொன்ன தேதியில் தொடங்கப்படாமல் இரண்டு ஆண்டுகள் கழித்து தான் தொடங்கியது. ஆனால், படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் நேரத்தில் வேறு படங்களில் கமிட் ஆகிவிட்ட காரணத்தினால் இந்தியன் 2 படத்தில் நடிக்க முடியாத சூழல் உருவானது.
கமிட் ஆன படத்தில் நடிக்க மறுத்துவிட்டு சென்றால் துறையில் கெட்ட பெயர் ஏற்பட்டு விடும். இதனால், அந்த படக்குழுவினரும் வேறு நடிகையை தேடி அழைய வேண்டிய சூழல் உருவாகும். இதனால், கண்ணியமாக கமிட் ஆன படங்களில் கவனத்தை செலுத்தி இந்தியன் 2 பட வாய்ப்பை மறுத்துவிட்டார் அம்மணி.
இது குறித்துsசமீபத்தில் பேசிய அவர், இது எனக்கு நடந்த மிகப்பெரிய கொடுமையான விஷயம். பிரமாண்ட இயக்குனர், உலக நாயகன் ஹீரோவாக நடிக்கும் படத்தில் எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் போராடி வந்த எனக்கு கிடைத்த வாய்பை நழுவ விட்டுவிட்டேன். இதனை நினைத்து இரண்டு நாட்கள் தூங்க முடியாமல் அவதிப்பட்டேன் என்று வேதனையுடன் கூறியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்,.